தடைக்கு மேல் தடை.. சிக்கலில் பீஸ்ட்! – ரசிகர்கள் அதிர்ச்சி!
குவைத்தை தொடர்ந்து கத்தாரிலும் பீஸ்ட் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் நடித்து நெல்சன் இயக்கியுள்ள படம் பீஸ்ட். இந்த படத்தில் பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் படம் வெளியாக இரண்டு நாட்களே உள்ள நிலையில் பீஸ்ட் படம் கத்தாரில் தடை செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக காட்டியுள்ளதால் குவைத்தில் படம் தடை செய்யப்பட்ட நிலையில் அதை தொடர்ந்து கத்தாரிலும் தடை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.