வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 5 ஜூன் 2024 (08:00 IST)

ரஜினியும் பாலையாவும் சேந்து ஸ்க்ரீன்ல வந்தா எப்படி இருக்கும்?- ஸ்கெட்ச் போடும் நெல்சன்!

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரஜினிகாந்த், மோகன் லால், சிவராஜ் குமார், விநாயகன் மற்றும் தமன்னா ஆகியோர் நடித்த ஜெயிலர் படம் ரிலீஸாகி பெருவெற்றி பெற்றது. படத்தின் விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும், வசூலில் கலக்கி 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இதனால் உடனடியாக ஜெயிலர் 2 உருவாகும் என தகவல்கள் பரவின.

ரஜினியும் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததாக சொல்லப்பட்டது.  இப்போது ரஜினி வேட்டையன் மற்றும் லோகேஷ் இயக்கும் ரஜினி 171 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதன் பிறகு ஜெயிலர் 2 தொடங்கும் என சொல்லப்பட்டது. அதையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கும் என சொல்லப்பட்டது.

இப்போது ஜெயிலர் 2 திரைப்படத்துக்கான திரைக்கதைப் பணிகள் நடப்பதாக சொல்லப்படுகிறது. ஜெயிலர் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் போன்ற நடிகர்கள் சிறப்புத் தோற்றத்தில் நடித்த நிலையில் ஜெயிலர் 2 வில் எண்டிஆரின் மகனான பாலகிருஷ்ணாவை நடிக்க வைக்க நெல்சன் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது ரஜினி மற்றும் பாலகிருஷ்ணா ஆகிய இருவரின் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.