விஜய் சேதுபதியை விட ஆர் கே சுரேஷ் மேல் நம்பிக்கை வைத்த இயக்குனர் பாலா!

Last Modified திங்கள், 17 மே 2021 (12:55 IST)

இயக்குனர் பாலா தயாரித்துள்ள விசித்திரன் படத்தில் அவரின் நெருங்கிய நண்பர் ஆர் கே சுரேஷ் நடித்துள்ளார்.

மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ஜோசப். அதை தமிழில் ஆர் கே சுரேஷ் நடிக்க இயக்குனர் பாலா தயாரிக்க உள்ளார். அதற்கான ஆரம்ப கட்ட பணிகள் முடிந்து இப்போது படப்பிடிப்புக்கு தயாராக உள்ளது படக்குழு. பட வேலைகள் எல்லாம் முடிந்து ரிலிசுக்கு தயாராகி இருந்த நிலையில் கொரோனா காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் நாயகன் ஆர் கே சுரேஷ் அளித்த நேர்காணலில் ‘முதலில் இந்த படத்தில் மாதவன் அல்லது விஜய் சேதுபதிதான் நடிக்க இருந்தனர். ஆனால் பாலா சார்தான் என்னைப் பரிந்துரை செய்து நடிக்க வைத்தார். படம் ஓடிடி ரிலிஸா அல்லது திரையரங்க ரிலீஸா என்பதை தயாரிப்பாளர்தான் முடிவு செய்வார்’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :