திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 2 நவம்பர் 2022 (18:13 IST)

''அவதார் 2'' பட டிரைலர் லீக்-? இணையதளத்தில் வைரல்

avatar-2
கடந்த 2009ஆம் ஆண்டு, உலகம் முழுவதும் சூப்பர்ஹிட்டான ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் திரைப்படம் வெளியானது.

24 நான்கு கோடி டாலர்  பட்ஜெட்டில் உருவான இந்த படம் 284 கோடி டாலர் வசூல் செய்தது.
இந்த நிலையில் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வரும் டிசம்பர் மாதம்16  ஆம் தேதி  இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

டைட்டானிக் நடிகை கேட் வின்ஸ்லெட்டின் லுக் உள்ளிட்டோர் நடிப்பில், தோராயமாக  250 மில்லியன் டாலர் செலவில் உருவாகியுள்ள இப்படம், 160 மொழிகளில் டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவதார் படத்தின் இரண்டாம் பாகத்தின் தலைப்பு பற்றிய தகவல் இப்போது வெளியாகியுள்ளது ‘Avatar 2: the way of water’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சமீபத்தில் அவதார் 2 படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி உலக சினிமா ரசிகர்களைக் கவர்ந்த  நிலையில்,இப்படத்தின் டிரைலர் இன்று ஷாருக்கானின் பதான் பட ரீசருடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இன்னும் டிரைலர்  வெளியாகாத நிலையில், 6:30 மணி முதல் 8 மணிக்குள் இன்று டிரைலர் வெளியாகலாம் என தகவல் வெளியாகிறது.

இந்த நிலையில், அவதார் -2 பட டிரைலர் லீக் ஆகியுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

Edited by Sinoj