குழந்தை குரலில் கொஞ்சி கொஞ்சி பேசும் அதுல்ய ரவி - ஆனால், பேசுறதையா கேக்குறாங்க?
தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் டப்ஸ்மாஷ், குறும்படம் ஆகியவற்றில் நடித்து பெரிய ஹீரோங்களுக்கு ஈடாக பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. அவர் நடித்த பல குறும்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கிய "ஏமாளி" படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
அதையடுத்து வெளிவந்த காதல் கண்கட்டுதே படம் அதுல்யாவிற்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. பின்னர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் நாடோடிகள்2, மற்றும் எஸ்.வி சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகிய "கேப்மாரி" படத்திலும் நடித்திருந்தார்.
இதற்கிடையில் கொரோனா ஊரடங்கில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் அதுல்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்ப்போது ஹேர் கேர் குறித்த விளம்பரத்தில் நடித்த வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதில் குழந்தை குரல் போன்று கொஞ்சி கொஞ்சி பேசும் அதுல்யா என்ன சொல்கிறார் என கவனித்தாலும் கொஞ்சம் நேரத்தில் கவனம் சிதறி விடுகின்றனர் ரசிகர்கள்.