வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 26 அக்டோபர் 2018 (19:18 IST)

மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய அசின்

கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற அசின் தொழில் அதிபர் ராகுல் சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கடந்த ஆண்டு 25ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அந்த தம்பதியினர் நேற்று மகளின் பிறந்த வெகு விமர்சியாக கொண்டியுள்ளனர்.
 
அசின் பெண்  குழந்தை எப்படி இருக்கும், அதன் பெயர் என்னவென்று கூட  யாருக்கும் தெரியாது. குழந்தையின் புகைப்படத்தையோ, பெயரையோ அவர்கள் வெளியிடாமல் பொத்தி பொத்தி வைத்திருந்தனர். 
 
இந்நிலையில் தனது மகளின் ஒன்றாவது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்கள். அந்த கொண்டாட்டத்தின்போது எடுத்த புகைப்படங்களை அசின் மற்றும் ராகுல் முதல்முறையாக தங்கள் மகளின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். குழந்தையின் பெயர் அரின் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அசினின் மகளை பார்க்க அவரின் ரசிகர்கள் ஓராண்டு காலம் காத்திருந்தனர். அது தற்போது நிறைவேறியுள்ளது.