அசோக் செல்வன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்!
நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் புதிய படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது.
நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் கார்த்திக் இயக்கவுள்ள புதிய படத்தை வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தின் பூஜை நேற்று நடைபெற்றுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக ரீத்து வர்மா மற்றும் அபர்ணா பாலமுரளி நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படம் சில ஆண்டுகளுக்கு முன்னர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாக இருந்தது. பின்னர் கைவிடப்பட்ட நிலையில் இப்போது மீண்டும் அசோக் செல்வனைக் கதாநாயகனாக்கி உருவாக்கப்பட உள்ளது.