புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (15:23 IST)

வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக பணம் வாங்கி மோசடி… ஆர்யா மீது புகார்!

நடிகர் ஆர்யா திருமணம் செய்துகொள்வதாக தன்னை ஏமாற்றி விட்டதாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்த ஆர்யா பல நடிகைகளோடு காதலில் இருப்பதாக அவ்வப்போது கிசுகிசுக்கள் வருவது உண்டு. இந்நிலையில் அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் இப்போது அவர் தன்னை திருமணம் செய்துகொள்வதாக சொல்லி 80 லட்சம் வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டதாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த விட்ஜா என்ற அந்த பெண் ஜெர்மன் நாட்டில் குடியுரிமை வாங்கி வாழ்ந்து வருகிறார். இப்போது அவர் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு ஆன்லைன் மூலமாக புகார் அளித்துள்ளார். இதையடுத்து இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.