திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (21:10 IST)

பாலாவின் அரசியல் படம் – ஹீரோவாக ஆர்யா …

இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் ஆர்யா புதியப் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். அதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் பாலா வர்மாப் பட பிரச்சனைகளால் தனக்கு ஏற்பட்டுள்ள அவமானங்களில் இருந்து வெளிவர உடனடியாகத் தனது அடுத்தப் பட வேலைகளை ஆரம்பித்துள்ளார். இந்தப் படம் அரசியல் படமாக இருக்கும் என பாலாவுக்கு நெருக்கமான  வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.

இதற்காக பாலா இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு, பணிகள் நடைபெறும் விதத்தை மேற்பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாலா ‘ நான் இயக்கும் புதுப்படத்தில் இது போன்றக் காட்சிகள் இடம்பெறுகின்றன. அதனால் இந்தக் கூட்டங்கள் எப்படி நடைபெறுகின்றன என்பதைத் தெரிந்துகொள்வதற்காக இங்கு வந்தேன் ‘ எனத் தெரிவித்தார்.

அதையடுத்து இப்போது அவர் இயக்கும் அந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்க ஆர்யா ஒப்பந்தமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இருவரும் ஏற்கனவே நான் கடவுள் மற்றும் அவன் இவன் ஆகியப் படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் பிற தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.