வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 30 செப்டம்பர் 2021 (09:52 IST)

சந்திக்க விரும்பிய முதல்வர்… ஆனால் தவிர்த்த விஜய்!

சமீபத்தில் டெல்லிக்கு படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் சென்றிருந்தார்.

தளபதி விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற்ற நிலையில் இரண்டாம் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. அதன் பின்னர் சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்றது.

இதற்காக விஜய் டெல்லி சென்றிருந்த போது டெல்லியின் முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால் விஜய்யை சந்திக்க வேண்டும் என விரும்பியுள்ளாராம். ஆனால் இது தேவையில்லாமல் தன் மேல் அரசியல் சாயத்தை பூசும் என நினைத்த விஜய் சந்திப்பை தவிர்த்து விட்டதாக சொல்லப்படுகிறது.

Source வலைப்பேச்சு.