1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (20:37 IST)

சம்பளத்தை செட்டில் செய்யாத தயாரிப்பாளர் : டப்பிங் பேச மறுத்த அரவிந்த் சாமி

தனக்கு பேசப்பட்ட சம்பளம் வந்து சேராததால், டப்பிங் பேச மறுத்துவிட்டாராம் அரவிந்த் சாமி. ‘சதுரங்க வேட்டை’ வினோத் கதையில் உருவாகியுள்ள படம் ‘சதுரங்க வேட்டை 2’. 
 
‘சைத்தான்’ இயக்குநர் நிர்மல் குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அரவிந்த் சாமி ஹீரோவாகவும், த்ரிஷா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி, நாசர், ராதாரவி, வம்சி கிருஷ்ணா, அமித் பார்கவ், ஸ்ரீமன், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 
 
இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், டப்பிங் பேச மறுத்திருக்கிறார் அரவிந்த் சாமி. காரணம், அவருக்கு பேசப்பட்ட சம்பளம் முழுமையாக வந்து சேரவில்லையாம். முழு சம்பளத்தையும் செட்டில் செய்தால் தான் டப்பிங் பேசுவேன் என்று சொல்லிவிட்டாராம்.
 
அரவிந்த் சாமியின் சம்பளத்தைப் பாக்கி வைத்தது ஏன் என படத்தின் தயாரிப்பாளரான மனோபாலா தான் சொல்ல வேண்டும்.