செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 7 ஜூலை 2022 (08:54 IST)

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட யானை சண்டைக் காட்சி… இணையத்தில் வெளியிட்ட அருண் விஜய்!

யானை படத்தின் சண்டைக்காட்சி ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு.

அருண் விஜய் மற்றும் தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவரான ஹரி கூட்டணியில் உருவான யானை திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூலை 1 ஆம் தேதி ரிலீஸானது. இதற்கு முன்னதாக யானை திரைப்படம் மே 6 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் ரிலீஸ் தேதி ஜூன் 17க்கு மாற்றப்பட்டது. விக்ரம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து ஜூலை 1-க்கு தள்ளிவைக்கப்பட்டது.

இதுவரை அருண் விஜய்யின் படங்கள் ரிலீஸ் ஆகாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக ‘யானை’  1500 திரைகளில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வார இறுதி நாட்களில் பல இடங்களில் ஹவுஸ் புல்லாக ஓடிய யானை திரைப்படம் நான்கு நாட்களில் சுமார் 12 கோடி வரை தமிழ் நாட்டில் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. விக்ரம் ரிலீஸூக்குப் பின்னர் எந்தவொரு தமிழ்ப் படமும் பெரிதாக வசூல் செய்யாத நிலையில் யானை திரைபடம் நல்ல வசூலைக் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற ஒரே காட்சியில் எடுக்கப்பட்ட பார் சண்டைக்காட்சியை தற்போது இணையத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது.