வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 18 மே 2019 (11:42 IST)

மிஸ்டர் லோக்கல் படத்தை பங்கமாக கலாய்த்த அருண் விஜய்!

சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படத்தை நடிகர் அருண்விஜய் மறைமுகமாக கலாய்த்துள்ளார். 

 
இயக்குனர் ராஜேஷ்  இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள "மிஸ்டர் லோக்கல்" என்ற காமெடி படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியது. இந்த படத்திற்கு சிவகார்த்திகேயன் ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தாலும் சினிமா விமர்சகர்களால் மோசமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. 
 
ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இப்படம் இல்லை என பலரும் கருத்து தெரிவித்துவருகிறார்கள். மேலும் ராஜேஷ் மற்றும் சிவகார்த்திகேயன் காம்போவில் உருவாகியதால் காமெடியில் களைகட்டும் என எதிர்பார்த்த  ஆடியன்ஸ்களுக்கு இப்படம் ஏமாற்றத்தையே  கொடுத்துள்ளது.
மோசமான விமர்சனங்களை பெற்று வரும் இப்படத்தை தற்போது நடிகர் அருண் விஜய் கிண்டல் செய்யும் விதமாக ஒரு ஸ்மைலியை போட்டு மறைமுகமாக டுவிட்டரில் கலாய்த்துள்ளார். இதனை பார்த்த எல்லோரும் மிஸ்டர் லோக்கல் படத்தை தான் கலாய்க்கிறார் என கூறிவருகின்றனர்.


 
ஏற்கனவே  ‘சீமராஜா’ திரைப்படம் வெளியான போது, அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் நீயெல்லாம் ஒரு மாஸ் ஹீரோவா? யார் எல்லாம் ஒரு பண்றதுன்னு ஒரு விவஸ்தை  இல்லாமல் போச்சு. தமிழ் ஆடியன்ஸ் திறமைக்கு மட்டும்தான் மதிப்பு கொடுப்பார்கள்” என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.