'தல'தான் முக்கியம்: மிஸ்டர் லோக்கல் புரமோஷனில் அஜித்?

Last Updated: வெள்ளி, 17 மே 2019 (18:09 IST)
கோலிவுட் திரையுலகில் ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் அந்த படத்தின் குழுவினர்கள் செய்யும் புரமோஷனில் அஜித் அல்லது விஜய் குறித்து குறிப்பிட்டு ரசிகர்களை தங்கள் படத்தின் பக்கம் கவனத்தை ஈர்ப்பது விளம்பர யுக்திகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள சிவகார்த்திகேயனின் 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படத்தின் புரமோஷன் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயனும், ராதிகாவும் பைக்கில் செல்ல, தலையில் உள்ள ஹெல்மெட் குறித்து ராதிகா, 'ரோட்ல போறவங்க வர்றவங்க எல்லாம் என்னை ஒரு மாதிரியாக பார்க்கின்றனர்' என்று கூற அதற்கு சிவகார்த்திகேயன், 'கரெக்டாக இருந்தாலே நம்ம ஊருல ஒரு மாதிரிதான் பார்ப்பாங்க, நமக்கு 'தல' தான் முக்கியம் என்று கூறுவார்
இந்த வசனத்தில் இருந்து ஹெல்மெட்டின் அவசியத்தை குறிப்பிடுவது மட்டுமின்றி 'தல' தான் முக்கியம் என்று கூறியதன் மூலம் அஜித் ரசிகர்களின் ஆதரவையும் சிவகார்த்திகேயன் பெற்று வருகிறார். இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் நல்ல ஆதரவு கொடுத்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :