மகன் செய்த செயலால் மனம் உருகிய அருண் விஜய்...!
சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர். தமிழகத்தில் வருகிற மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இதனால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, ஒர்க் அவுட் செய்வது விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர். இன்னும் சிலர் இந்த ஊரடங்கில் வருமானமின்றி பணத்திற்கும் , சாப்பாட்டிற்கு கஷ்டப்படும் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் அருண் விஜய்யின் மகன் அர்னவ் "நாம் பசியாக இருக்கும் அம்மாவுக்கு உணவிட வேண்டும், ஏனென்றால் அதற்கு குட்டிகள் இருக்கின்றது என கூறி தெரு நாய்களுக்கு சாப்பாடு போட்டாராம். அவன் மிகவும் இரக்கமுள்ள மகனாக வளர்ந்து வருவதை கண்டு ஒரு அப்பாவாக நான் பெருமிதம் அடைகிறேன் என கூறி அர்னவ் நாய்குட்டிகளுக்கு உணவளித்த புகைப்படங்களை அருண் விஜய் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.