செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (09:49 IST)

மறைந்த மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து… அருண் ராஜா காமராஜா பதிவு!

இயக்குனர் அருண் ராஜா காமராஜாவின் மனைவி சிந்துஜா கடந்த ஆண்டு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

நடிகர் சிவகார்த்திகேயனின் கல்லூரி கால நண்பரான அருண் ராஜா காமராஜா சிவகார்த்திகேயன் தயாரித்த கனா படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். மேலும் நடிகராகவும் சிவகார்த்திகேயன் பல படங்களில் அவரை நடிக்க வைத்துள்ளார். கனா படத்துக்கு பிறகு வெற்றி இயக்குனராகியுள்ளதாக அவர் இப்போது நெஞ்சுக்கு நீதி படத்தினை இயக்கி வருகிறார். 

இந்த படத்தின் உருவாக்கத்தின் போது அருண் ராஜாவின் மனைவி சிந்துஜா கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்தார். அதையடுத்து தற்போது அவரின் பிறந்தநாளை முன்னிட்டு அருண் ராஜா காமராஜா ஒரு எமோஷனலான பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில் “எப்போதும் உன்னை மிஸ் செய்கிறேன். லவ் யூ பாப்பி” என்று கூறி அவரின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.