அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வரலாற்றுக் கதையில் தனுஷ்!
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் அடுத்து நடிக்க உள்ளதாக சொல்லபடுகிறது.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ராக்கி வரும் டிசம்பர் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதையடுத்து அவர் செல்வராகவனை வைத்து இயக்கிய திரைப்படமும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அவர் தனது மூன்றாவது படத்தில் தனுஷை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துக்காக இவர்கள் இணையும் இந்த திரைப்படம் 1950 ஆம் ஆண்டுகளில் நடக்கும் கதை போல உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.