வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 15 டிசம்பர் 2021 (11:42 IST)

அந்த பாலிவுட் நடிகருடன் சேர்ந்து நடிக்கவேண்டும்… தனுஷ் ஆசை!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் அத்ராங்கி ரே படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் இப்போது கலந்துகொண்டு வருகிறார்.

ராஞ்சனா என்ற படத்தின் மூலம் தனுஷ் பாலிவுட்டில் அறிமுகமானார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.  அதன் பின்னர் அவர் ஷமிதாப் என்ற படத்தில் அமிதாப்புடன் இணைந்து நடித்தார். அந்த படம் தோல்வி அடைந்ததை அடுத்து பாலிவுட்டுக்கு ஒரு இடைவெளி விட்டார் தனுஷ். இதையடுத்து இப்போது தனுஷின் மூன்றாவது பாலிவுட் படமாக அத்ராங்கி ரே உருவாகியுள்ளது. இந்த படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது.

இதன் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் தனுஷிடம் எந்த பாலிவுட் நடிகரோடு இணைந்து நடிக்க ஆசை எனக் கேட்டபோது ‘ரன்பீர் கபூர். கண்டிப்பாக அவர் மிகச்சிறந்த நடிகர். அவருடன் நடிக்க ஆசை’ எனக் கூறியுள்ளார்.