புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (00:48 IST)

'விவேகம்' நெகட்டிவ் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த அருண்காமராஜ்

தல அஜித் நடித்த 'விவேகம்' படத்தை பல பெய்டு விமர்சகர்கள் கழுவி கழுவி ஊற்றிவரும் நிலையில் ஒருசில திரையுலக பிரமுகர்கள் அஜித்துக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். இந்த பட்டியலில் தற்போது பிரபல பாடலாசிரியர் மற்றும் பாடகர் அருண்காமராஜ் இணைந்துள்ளார்.



 
 
யூடியூபில் அக்கவுண்ட் ஓப்பன் செய்து சினிமாவை விமர்சனம் செய்து மட்டுமே பிழைப்பு நடத்தி வருபவர்கள், ஒரு கட்டத்தில் சினிமா எடுப்பதையே நிறுத்திவிட்டால் என்ன செய்வார்கள்? அப்படி ஆகாது என்ற நம்பிக்கையில் அவர்கள் விமர்சனம் செய்துவருகின்றனர்
 
வேண்டுமென்றே நெகட்டிவ் விமர்சனம் செய்து வருபவர்களை யாரும் கண்டுகொள்ள கூடாது. அவ்வாறு கண்டு கொள்வதால்தான் அவர்கள் பெரிய ஆளாகிவிடுகின்றனர். விமர்சனம் செய்பவர்கள் முதலில் ஒரு படத்தை செல்போன் கேமிராவில் எடுத்து அதை யூடியூபில் அப்லோடு செய்துவிட்டு பின்னர் விமர்சனம் செய்யுங்கள். அப்போதுதான் படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்பது தெரியும் என்று கூறியுள்ளார்