செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 12 ஜூலை 2021 (10:37 IST)

கப்பேல்லா ரீமேக்கில் அர்ஜுன் தாஸ்!

நடிகர் அர்ஜுன் தாஸ் கப்பேல்லா மலையாள பட ரீமேக்கில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

கைதி படத்தின் மூலம் மக்கள் மனதில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், அதன் பின்னர் மாஸ்டர் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.  அதன் பிறகு இவர் நடித்த அந்தகாரம் திரைப்படமும் நல்ல கவனத்தைப் பெற்றது. இந்நிலையில் இப்போது ஹீரோவாக நடிக்க சில படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதில் வசந்தபாலன் இயக்கும் படமும் ஒன்று.

இதையடுத்து இப்போது மலையாளத்தில் வெளியாகி பெருவெற்றி பெற்ற கப்பேல்லா திரைப்படத்தின் ரீமேக் பணிகள் தமிழில் நடந்து வருகின்றன. அதில் முக்கியமான வேடத்தில் நடிக்க அர்ஜுன் தாஸ் ஒப்பந்தம் ஆகியுள்ளார். மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.