ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 4 செப்டம்பர் 2024 (16:31 IST)

உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன ‘கோட்’ தயாரிப்பாளர்.. என்ன காரணம்?

தளபதி விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தமிழக அரசுக்கும் அமைச்சர் உதயநிதிக்கும் நன்றி தெரிவித்து தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

தமிழகத்தைப் பொருத்தவரை பெரிய நடிகர்கள் படங்கள் வெளியாகும் போது சிறப்பு காட்சிக்கு தமிழக அரசிடம் அனுமதி கேட்கப்படும் என்பதும் அந்த வகையில் அதிகபட்சமாக 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி கொடுத்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த ‘கோட்’ கோட் திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்திருந்த நிலையில் தமிழக அரசு அதனை பரிசீலனை செய்து காலை 9 மணி முதல் காட்சி ஆரம்பித்து அதிகபட்சமாக 5 காட்சிகள் திரையிட்டுக் கொள்ளலாம் என்று அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிலையில் ‘கோட்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், ‘கோட்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசு அனுமதி அளித்த ஆவணத்தையும் அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து ‘கோட்’ திரைப்படம் முதல் நாள் முதல் காட்சி 9 மணிக்கு தமிழகத்தில் தொடங்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Edited by Siva