திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 30 ஜூன் 2022 (10:22 IST)

கமல்ஹாசனுக்கு கோல்டன் விசா! – அரபு அமீரகம் கௌரவம்!

Kamalhassan
நடிகர் கமல்ஹாசனுக்கு அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது.

கடந்த சில காலமாக அரபு அமீரகம் இந்தியாவில் உள்ள பிரபலமான நபர்களுக்கு கோல்டன் விசா என்னும் சிறப்பு விஐபி விசாவை வழங்கி கௌரவித்து வருகிறது. முன்னதாக நடிகர் சரத்குமார், இயக்குனர் வெங்கட்பிரபு உள்ளிட்டோருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கோல்டன் விசாவை வழங்கி கௌரவித்துள்ளது அமீரகம். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன,.