’தளபதி 65’ படத்தில் இருந்து நீக்கப்படுகிறாரா ஏஆர் முருகதாஸ்? அறிவிப்பு வெளிவராததன் பின்னணி
’தளபதி 65’ படத்தில் இருந்து நீக்கப்படுகிறாரா ஏஆர் முருகதாஸ்?
தளபதி விஜய் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படமான 'தளபதி 65' திரைப்படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்க உள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதிசெய்யப்பட்ட நிலையில் திடீரென அதில் மாற்றம் ஏற்படுமோ என்ற தகவல் வெளியாகியுள்ளது
கடந்த விநாயகர் சதுர்த்தி தினத்தில் ’தளபதி 65’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்பட்டது. ஆனால் திடீரென இந்த அறிவிப்பை வெளியிட வேண்டாமென சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் விஜய் கேட்டுக் கொண்டதாகவும் விஜய் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது
முன்னதாக ஏஆர் முருகதாஸ் கூறிய கதையின் முதல் பாதி விஜய்க்கு பிடித்த இருந்ததாகவும் ஆனால் இரண்டாம் பாதி அவருக்கு திருப்தி இல்லை என்றும் அதனை சரிசெய்து கொண்டு வருமாறு ஏ ஆர் முருகதாஸ் அவர்களிடம் விஜய் கேட்டுக் கொண்டதாகவும் ஏஆர் முருகதாஸின் முழு கதையும் தனக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
ஒருவேளை ஏஆர் முருகதாஸ் சரிசெய்து கொண்டு வந்த திரைக்கதையும் விஜய்க்கு பிடிக்கவில்லை என்றால் இயக்குனர் மாற்றப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது