ரஜினியுடன் மோத தயாராகும் அனுஷ்கா
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 2.0. எமி ஜாக்சன் ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
அக்ஷய் குமார் நடித்துள்ள பத்மன் படம் வரும் ஜனவரி 26ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், ரஜினியின் 2.0 தள்ளிப்போகும் என்று கூறப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி, ரஜினியின் 2.0 ஜனவரி 25ம் தேதி வெளியாகும் என்று லைகா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் ஜி.அசோக் இயக்கி, அனுஷ்கா நடிப்பில் தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழில் ஆகிய மொழிகளில் உருவான பாக்மதி படம் வரும் ஜனவரி 26ம் தேதி ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஆதி பின்னிஷெட்டி, ஜெயராம், உன்னி முகுந்தன், ஆஷா சரத் ஆகியோர் நடித்துள்ளனர்.
ரஜினியின் 2.0 படம் ஜனவரி 25ம் தேதி வெளியானால், பாக்மதி கடும் போட்டியை சமாளிக்க வேண்டி இருக்கும். தாக்கு பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.