1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Suga)
Last Modified: புதன், 8 நவம்பர் 2017 (18:50 IST)

நிஜமாகவே ஒல்லியாகிவிட்டாரா அனுஷ்கா?

‘பாக்மதி’ படத்தின் போஸ்டரைப் பார்த்ததும், அனுஷ்கா நிஜமாகவே ஒல்லியாகிவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


 
 
‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் நடிப்பதற்காக, சிக்கென இருந்த தன்னுடைய உடல் எடையை காற்று நிரம்பிய பலூன் போல ஆக்கினார் அனுஷ்கா. அந்தப் படம் முடிந்ததும் எடையைக் குறைத்துவிடலாம் என்று நினைத்தார். ஆனால், எடை குறைந்தேனா என்கிறது.
 
இத்தனைக்கும் அனுஷ்கா யோகா டீச்சர் வேறு. குண்டான உடம்போடு தான் ‘பாகுபலி 2’ படத்தில் நடித்தார் அனுஷ்கா, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவரை ஒல்லியாகக் காட்டினார்கள், அதற்கு சில கோடிகள் செலவானது என்றார்கள்.
 
தற்போது வெளியாகியிருக்கும் ‘பாக்மதி’ போஸ்டரில், பயங்கர ஸ்லிம்மாகக் காட்சியளிக்கிறார் அனுஷ்கா. உண்மையிலேயே அவர் எடையைக் குறைத்துவிட்டார் என்றும், ‘பாகுபலி 2’ போன்றே டெக்னாலஜி மூலம் மாற்றியிருக்கிறார்கள் என்றும் இருவேறு விதமான கருத்துகள் நிலவுகின்றன. அனுஷ்காவே நேரடியாக வெளியில் வந்தால்தான் இதற்கெல்லாம் விடை கிடைக்கும்.