1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 24 டிசம்பர் 2017 (11:59 IST)

பிரபாஸால் அனுஷ்காவிற்கு கிடைத்த 11 லட்சம்....

அனுஷ்கா தற்போது பாகிமதி என்ற படத்தில் நடித்து வருகிறார். அனுஷ்காவின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. சமீபத்தில் பாகமதி படத்தின் டீஸர் வெளியாகியது. 
 
ஸ்டுடியோ க்ரீன் வெளியிடும் இந்த படத்தில் அனுஷ்கா, உன்னி முகுந்தன், ஜெயராம், ஆஷா சரத் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஜி.அசோக் இயக்கி வரும் இந்த படம் வரும் ஜனவரியில் வெளியாகவுள்ளது.
 
பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் பிரபாஸ், அனுஷ்கா இருவரும் வரவேற்கதக்க ஜோடியாக உள்ளனர். இவர்களது ரசிகர்கள் இருவரையும் திருமணம் செய்துக்கொள்ளுமாறு கோரிக்கை வைத்ததும் அனைவருக்கும் தெரிந்ததே. 
 
இந்நிலையில், இந்த படத்தின் டீசரை பிரபாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு அனுஷ்காவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரபாஸ் குறிப்பிட்டுள்ளதாவது, படங்கள் மூலம் ஏதாவது புதுமை செய்வதில் மற்றவர்களை விட எப்போதுமே முதலிடத்தில் இருப்பார். குட்லக் ஸ்வீட்டி என தெரிவித்துள்ளார். 
 
பிரபாஸின் சமூக வலைத்தள பக்கம் மூலம் அனுஷ்காவின் டீஸரை 11 லட்சம் பேர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.