ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 13 ஏப்ரல் 2022 (09:36 IST)

ரைட்டர் படத்தைப் பார்த்து பாராட்டிய முன்னணி பாலிவுட் இயக்குனர்… இயக்குனர் நெகிழ்ச்சி!

ரைட்டர் திரைப்படத்தை பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் பார்த்து பாராட்டியுள்ளார்.

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் பிராங்கிளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவான திரைப்படம் ரைட்டர். இந்த படம் சமீபத்தில் வெளியாகி ஊடகங்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறையில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பேசிய இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இதையடுத்து தற்போது இந்த படத்தைப் படக்குழுவினர் பாலிவுட் முன்னணி இயக்குனர் அனுராக் காஷ்யப்புக்கு திரையிட்டுள்ளனர். படத்தைப் பார்த்த அவர் படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டியுள்ளார். இது சம்மந்தமாக புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள இயக்குனர் பிராங்ளின் ஜேக்கப் இந்த வாய்ப்பை ஏற்படுத்திய இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் பா ரஞ்சித் ஆகிய இருவருக்கும் நன்றியைப் பகிர்ந்துள்ளார்.