1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : சனி, 17 பிப்ரவரி 2018 (15:20 IST)

‘தளபதி 62’ படம் பற்றிய இன்னொரு வதந்தி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘தளபதி 62’ படம் பற்றிய இன்னொரு வதந்தி வெளியாகியிருக்கிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் ‘தளபதி 62’. விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம்  தயாரிக்கிறது. ‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். க்ரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராகப்  பணியாற்றுகிறார்.
 
இந்தப் படத்தின் படப்பிடிப்பு, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூர் மற்றும் கொல்கத்தாவில் நடைபெற்றுள்ளது. இந்தப் படத்தில் ‘பிக்  பாஸ்’ ஜூலி நடிப்பதாக சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. ஆனால், அந்தத் தகவல் பொய் எனத் தெரியவந்துள்ளது.
 
இந்நிலையில், ‘கோவா’, ‘கோ’ உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்த பியா பாஜ்பாய் ‘தளபதி 62’ படத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்தத் தகவலை பியா பாஜ்பாய் மறுத்துள்ளார். படக்குழுவினரிடம் இருந்த தனக்கு எந்தவொரு அழைப்பும் வரவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.