திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 3 ஏப்ரல் 2021 (19:05 IST)

அவங்களா இவங்க? விஷாலுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் பிகினி போட்டோ!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் , தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் இருந்த விஷால், நடிகர் சங்கத்தின் கட்டிடம் முடித்த பிறகுதான் திருமணம் செய்துக்கொள்ளப் போவதாக தெரிவித்திருந்தார். இதற்கிடையில் கடந்த 2019ம் ஆண்டு  ஹைதராபாத்தைச் சேர்ந்த அனிஷா அல்லா ரெட்டி என்பவருடன் விஷாலுக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
 
அதையடுத்து வருகிற அக்டோபர் மாதம் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் இரு குடும்பத்தாரும் தீவிரமாக திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். ஆனால், அந்த திருமணம்  நின்று போனதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் வெளியாகின. அனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஷாலுடன் இருந்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கினார் இதன் மூலம் திருமணம் நடக்காது என்பது தெரியவந்தது.

இந்நிலையில் தற்போது அனிஷா அல்லாஹ்வின் பிகினி புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி காட்டு தீ போன்று பரவி வைரலாகியுள்ளது. இந்த போட்டோவை கண்டு இன்டர்நெட்டே  ஸ்தம்பித்துவிட்டது.