புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வெள்ளி, 8 அக்டோபர் 2021 (16:03 IST)

இந்தி சினிமாவுக்கு செல்லும் அனிருத்?

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் அனிருத். இவர் தெலுங்கில் ஹிட் அடித்த ஜெர்ஸி படத்தின் ரீமேக் படம் மூலம் பாலிட்டில் அறிமுகமாக உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

 தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் அனிருத். இவர் தற்போது, கமல் இந்தியன் -2) , விஜய்சேதுபதி( காத்து வாக்குல ரெண்டு காதல்) , விஜய்( பீஸ்ட் ) உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். 

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான   ஜெர்ஸி படத்தின் இந்தி ரீமேக் படத்திற்கு இசையமைப்பதன் மூலம் அனிருத் பாலிவுட்டில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது.