செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 6 ஜூலை 2021 (09:46 IST)

ஜூலை 8 முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி!

ஆந்திராவில் திரையரங்குகள் ஜூலை 8 முதல் மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக அமலாக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் 3 மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டன. இதையடுத்து இப்போது தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளோடு திரையரங்குகள் திறக்க மாநில அரசுகள் அனுமதி அளித்து வருகின்றன.

அந்த வகையில் ஆந்திராவில் ஜூலை 8 முதல் திரையரங்குகளை 50 சதவீத இருக்கைகளோடு திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.