1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 4 ஏப்ரல் 2017 (16:08 IST)

தமிழ் தயாரிப்பாளர்களை சந்தோஷப்படுத்த எமி என்ன செய்தார் தெரியுமா?

எமி ஜாக்ஸனுக்கு ரஜினியுடன் நடிக்கும் 2.O மட்டும் தான் தற்போது தமிழில் கைவசம் இருக்கும் படம்.


 
 
ஆனால் ஒரு படத்தை வைத்துக்கொண்டு சென்னையில் தனி வீடு வாங்கிக் குடியேறி விட்டார். வீடு வாங்கியதற்கான காரணம் தான் அனைவரையின் ஆச்சர்யபட வைத்துள்ளது.
 
இதுநாள் வரை எமி ஜாக்ஸன் சென்னை வந்தால் நட்சத்திர ஹோட்டலில் தான் தங்குவார். அந்த செலவை தயாரிப்பாளர்கள் தான் ஏற்றுக்கொள்வார்கள்.
 
இதனாலேயே பல தயாரிப்பாளர்கள் எமியை படத்தில் கமிட் பண்ண யோசித்தார்கள். எனவே தயாரிப்பாளர்கள் யாரும் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக எமி சென்னையில் புது வீடு வாங்கி விட்டார் என தெரியவந்துள்ளது.