கிரீன் இந்தியா சவால்… மரக்கன்றுகளை நட்ட அமிதாப் பச்சன்!
தெலுங்கு படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குனர் அமிதாப் பச்சன் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று மரக்கன்றுகளை நட்டுள்ளார்.
பாகுபலி புகழ் பிரபாஸ் நடிக்கவிருக்கும் 21 வது படம் குறித்த அதிரடி அறிவிப்புகள் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகின. கீர்த்தி சுரேஷ் நடித்த நடிகையர் திலகம் என்ற ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கும் இந்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூகவலைதளங்களில் பேசப்படும் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று படப்பிடிப்பு தளத்தில் மரக்கன்றை நட்டார். அப்போது தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா அவரோடு இருந்தார்.