திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 1 மார்ச் 2021 (08:42 IST)

திடீரென அறுவை சிகிச்சை செய்துகொண்ட அமிதாப் பச்சன்!

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளதாக தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் 80 வயதிலும் பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். மேலும் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் தனது அன்றாட நிகழ்வுகளை வெளியிட்டு எழுதி வருகிறார். இந்நிலையில் சில நாட்களாக அவர் எந்த பதிவையும் எழுதாத நிலையில் திடீரென நேற்று ‘மருத்துவப் பிரச்சனை… அறுவை சிகிச்சை… அதனால் எதுவும் எழுத முடியவில்லை ‘ என ஒரு டிவீட்டைப் பகிர்ந்திருந்தார்.

இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் அமிதாப் சீக்கிரமே குணமாகவேண்டும் என்று வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.