செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva

292 முறை ஒரே சினிமாவை பார்த்த இளைஞர்: கின்னஸில் இடம் பெற்றார்!

cinema
292 முறை ஒரே சினிமாவை பார்த்த இளைஞர்: கின்னஸில் இடம் பெற்றார்!
ஒரே திரைப்படத்தை 292 முறை பார்த்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற இளைஞர் குறித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சமீபத்தில் வெளியான ஸ்பைடர்மேன் நோ வே டு ஹோம் என்ற திரைப்படத்தை 292 முறை தொடர்ச்சியாக பார்த்து உள்ளார் 
 
இதனை அடுத்து அவரது பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி அன்று இந்த படத்தை முதலில் பார்த்த அந்த இளைஞர் தொடர்ச்சியாக மார்ச் 15ஆம் தேதி வரை 292 முறை பார்த்துள்ளார் 
இதற்காக அவர் தனது வாழ்வில் 720 மணி நேரத்தை செலவிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவரது பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.