அமீர் தயார் செய்த ஃபைல், அமலாக்கத்துறையினர் கையில் சிக்கியதா? பெரிதாகும் சிக்கல்..!
இயக்குனர் அமீர் - ஜாபர் சாதிக் விவகாரம் தொடர்பாக ஒரு ஃபைல், தயார் செய்து வைத்திருந்ததாகவும் அந்த ஃபைல், தற்போது அமலாக்கத்துறையினர் கையில் சிக்கி இருப்பதாகவும் கூறப்படுவதால் அமீருக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணையில் அமீர் சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜரான நிலையில் தனக்கும் ஜாபர் சாதிக்கிற்கும் இடையே உள்ள பிசினஸ் சினிமா தயாரிப்பு உள்ளிட்ட ஆவணங்களை தாக்கல் செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர்,.
இதற்காக தன்னுடைய ஆடிட்டர் வழக்கறிஞர் ஆகியோர்களின் ஆலோசித்து ஒரு ஃபைல், தயார் செய்து வைத்திருந்த நிலையில் அந்த பையில் எடிட் செய்யும் முன்பே அமலாக்கத்துறையினர் சமீபத்தில் செய்த ரெய்டில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது
அதில் பல்வேறு பரிவர்த்தனைகள் இருப்பதை அடுத்து அமீருக்கு கூடுதல் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆவணங்களால் அமீருக்கு சிக்கல் அதிகமாகிறது என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.,
Edited by Siva