செவ்வாய், 25 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (11:07 IST)

அமலா பாலுக்கு சமுத்திரகனி ஆதரவு - ஒரு ட்விட்டர் ட்விஸ்ட்

அமலா பாலுக்கு சமுத்திரகனி ஆதரவு - ஒரு ட்விட்டர் ட்விஸ்ட்

சமுத்திரகனியின் ட்விட்டர் செய்திக்கு மவுசு அதிகம். அதிலும், கபாலி இம்ப்ரஸ் பண்ணலை, ஏமாற்றம் என்று ட்விட் போட்டதிலிருந்து கான்ட்ரவர்சியாக ஏதாவது எழுதியிருப்பாரோ என்று நிருபர்கள் கூட்டம் அவரது ட்விட்டர் பக்கத்தைதான் மொய்க்கிறது.


 
 
இந்நிலையில், நான் அமலாபாலுக்கு சப்போர்ட் செய்கிறேன். ஒரு பெண் திருமணத்துக்கு பிறகு நடிப்பது என்பது அவரது விருப்பம். சூர்யாவைப் பார்த்து கற்றுக் கொள்ளவேண்டும் என்று ட்வீட் செய்திருந்தார். 
 
பொதுவாக இதுபோன்ற விஷயங்களில் யாருக்கும் ஆதரவு தராமல் நடுநிலை வகிப்பதுதான் சினிமா புத்திசாலிகளின் முடிவாக இருக்கும். இயக்குனரான சமுத்திரகனி, சக இயக்குனர் விஜய்யை இப்படி விமர்சித்திருக்கிறாரே என்று விசாரித்தால், அது சமுத்திரகனியின் ட்விட்டர் கணக்கு கிடையாதாம். அவர் பெயரில் ஏதோ மோசடி பேர்வழி உருவாக்கிய கணக்காம். 
 
சே... ஒரு நல்ல கான்ட்ரவர்சி இப்படி காலாவதியாச்சே.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்