க்யூட் நயன்… மாஸ் பிருத்விராஜ்… வெளியானது அல்போன்ஸ் புத்ரனின் கோல்ட் டீசர்!
அல்போன்ஸ் புத்ரன் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கியுள்ள கோல்ட் படத்தின் டீசர் நேற்று வெளியானது.
நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி மிகப் பெரிய புகழ்பெற்ற இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அடுத்ததாக பிரேமம் என்ற படத்தின் மூலம் நாடு முழுவதும் புகழ் பெற்றார். இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. குறிப்பாக தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஹிட் ஆனது என்பதும், சென்னையில் இந்த திரைப்படம் தொடர்ச்சியாக ஒரு வருடம் ஒரே திரையரங்கில் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அவ்வளவு பெரிய வெற்றி பெற்ற திரைப்படத்துக்கு பிறகு 5 ஆண்டுகளாக அவர் அடுத்த படத்தை பற்றி அறிவிக்கவில்லை. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் பஹத் பாசிலை வைத்து பாட்டு என்ற படத்தை இயக்கப்போவதாக அறிவித்தார். ஆனால் அதற்கு முன்னதாக இப்போது பிருத்விராஜ் நடிக்கும் கோல்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா நடித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை கோல்ட் படத்தின் டீசர் இணையத்தில் வெளியானது. பிரேமம் ஸ்டைடில் ஸ்லோமோஷன் காட்சிகளும் ரகளையான இசையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது டீசர். டீசரின் இறுதியில் நயன்தாரா மிகவும் க்யூட்டாக தோன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த டீசர் இப்போது இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது.