வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 3 டிசம்பர் 2024 (08:58 IST)

என்ன டான்ஸ் இது… முகச்சுளிப்பை வரவைக்கும் ‘புஷ்பா 2’ பீலிங்ஸ் பாடல் நடனம்!

புஷ்பா முதல் பாகத்தின் வெற்றி அதன் இரண்டாம் பாகத்தின் வணிக மதிப்பைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது. அதனால் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகின்றனர். தற்போது இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி படம் ரிலீஸாகிறது.  

படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது. படத்துக்கான ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி படம் 3 மணி நேரம் 21 நிமிடம் ஓடும் வகையில் எடிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் ரிலீஸை ஒட்டி தற்போது பீலிங்ஸ் பாடல் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. இந்த பாடலில் வரும் வரிகள் இரட்டை அர்த்தம் தொனிக்கும்படி நடன அசைவுகள் முகம் சுளிக்க வைக்கும் வகையிலும் உள்ளதாக இப்போதே விமர்சனங்கள் எழ ஆரம்பித்துள்ளன.