வெள்ளி, 25 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 24 அக்டோபர் 2024 (15:58 IST)

புஷ்பா 2 படத்தின் புது ரிலீஸ் தேதியை அறிவித்த அல்லு அர்ஜுன்!

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படம் புஷ்பா. இந்த படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தியா முழுவதும் ஒரு பிராண்ட்டாக மாறியது புஷ்பா 2 திரைப்படம். இந்நிலையில் அதன் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகின்றனர். தற்போது இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி படம் ரிலீஸாகிறது. படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்த படம் பல்வேறு தாமதங்களுக்குப் பிறகு டிசம்பர் 6 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒருநாள் முன்னதாக டிசம்பர் 5 ஆம் தேதியே ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் வியாழக் கிழமையே ரிலீஸ் ஆவதால் ஒரு நாள் முன்னதாக புஷ்பா 2 திரைப்படமும் வியாழக் கிழமையே ரிலீஸாகிறது.