45 வயதுக்கு மேற்பட்ட தனது தொழிலாளர்களுக்கு தடுப்பூசி… ஏற்பாடு செய்யும் அல்லு அர்ஜுன்!
நடிகர் அல்லு அர்ஜுன் தன்னிடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கான தடுப்பூசி ஏற்பாடுகளை செய்து வருகிறாராம்.
இந்தியாவில் இப்போது கொரொனா தடுப்பூசிகள் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா தடுப்பூசிகளில் தட்டுப்பாடு உள்ளது என்பதே கள நிலவரம். இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் தன்னிடம் வேலை செய்யும் தொழிலாளர்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளாராம். சமீபத்தில் அவர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.