தமிழகத்தின் அனைத்து நகரங்களில் இசை நிகழ்ச்சி.. இளையராஜா அறிவிப்பு..!
பொதுவாக பிரபல இசையமைப்பாளர்கள் வெளிநாடுகளில் மட்டும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர், அதுமட்டுமின்றி சென்னை போன்ற பெரிய நகரங்களில் மட்டுமே இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். . இந்நிலையில், தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் இசை நிகழ்ச்சி நடத்தப் போவதாக இசைஞானி இளையராஜா தனது சமூக வலைதளத்தில் தெரிவித்தார்.
இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி கடந்த 14 ஆம் தேதி கும்பகோணத்தில் நடந்தது. கொட்டும் மழையிலும், ரசிகர்கள் அவரது இசையை ரசித்து கேட்டனர். இதையடுத்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
"பெரும் மழையிலும், என் இசை நிகழ்ச்சியை ரசிக்க வந்த கும்பகோணம் மக்களே, உங்களின் ஆதரவை மறக்க முடியாது. நன்றி!
இனி என் இசை பயணம் தலைநகரில் மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊர்களிலும் நடைபெறும்."
இளையராஜாவின் இந்த அறிவிப்பு இசை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இனி, தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் அவரது இசை நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது என்பதால், இனி இசை மழையில் நனையலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Edited by Siva