வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 6 ஏப்ரல் 2019 (12:23 IST)

இதற்காக தான் அஜித் பேட்டி கொடுப்பதில்லை! பல நாள் ரகசியத்தை சொன்ன கோபிநாத்.!

கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு சொந்தக்காரரான அல்டிமேட் ஸ்டார் தல அஜித்  கடந்த சில வருடங்களாகவே எந்த ஒரு கலை நிகழ்ச்சிக்கோ, பாராட்டு விழாவிற்கோ , திரைப்பட விருது விழாவிலோ கலந்து கொள்வதில்லை. அவ்வளவு ஏன் தனது படத்தின் பாராட்டு விழாவில் கலந்துகொள்வதை கூட பல ஆண்டுகளாக தவிர்த்து வருகிறார் அஜித்.
 

 
அஜித் 10 ஆண்டுகளுக்கு முன்னர்  கலைஞர் தொலைக்காட்சியில் பேட்டி அளித்தார். அது தான் அவர் பங்கேற்ற கடைசி நிகழ்ச்சி அதன் பின்னர் அவர் வேறு எந்த ஒரு பேட்டியிலும் கலந்து கொண்டது இல்லை. இந்நிலையில் அஜித் ஏன் பேட்டி கொடுப்பது இல்லை என அஜித்தை பல ஆண்டுகளுக்கு முன்னர் பேட்டி கண்ட நீயா நானா கோபிநாத் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.    
 
அவர் கூறியதாவது, நான் அஜித்தை பேட்டி எடுத்த போது, அவர் கூறியது இதுதான் ..  சார் நான் ஆரம்பத்தில் தமிழை தவறாக பேசினேன், அப்போது ஒரு மாதிரி பேசினார்கள். அதன் பின்னர் ஆங்கிலத்தில் பேட்டி கொடுத்தேன் , உடனே ஒரு தமிழ் நடிகன் ஆங்கிலத்தில் பேசுவதா? என்று அதற்கும் திட்டினார்கள். 

அதன் பிறகு இனி பேசவே வேண்டாம் என்று முடிவு செய்தேன், ஆனால், அப்போதும்,  அஜித் என்ன அவ்வளவு பெரிய ஆளா, பேசமாட்டாரா? என்று கூறினார்கள், பிறகு என்ன செய்வதென்றே தெரியாமல் தான் இப்படி ஒரு முடிவு எடுத்தேன் என்று கூறினார் என கோபிநாத் தெரிவித்துள்ளார்.