நண்பர்களுடன் டீனேஜ் புகைப்படத்தில் அஜித்!
நடிகர் அஜித் டீனேஜில் தனது நண்பர்களுடன் இருக்கும் புகைப்படம் இப்போது இணையத்தில் பரவி வருகிறது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் அஜித். அவருக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கும் நிலையில் துணிச்சலாக ரசிகர் மன்றங்களைக் கலைத்துவ்ட்டு தான் உண்டு தன் படங்கள் உண்டு என இருந்து வருகிறார். பொது விழாக்களிலும் கலந்துகொள்வதில்லை.
அதனால் அஜித்தின் புகைப்படங்கள் மற்றும் அவர் சம்மந்தபட்ட தகவல்கள் எல்லாம் எப்படியோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தும். இந்நிலையில் இதுவரை வெளிவராத அஜித்தின் டீனேஜ் புகைப்படம் ஒன்று இப்போது இணையத்தில் பரவி வருகிறது.