1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 16 டிசம்பர் 2022 (19:52 IST)

அஜித்தின் உலகச் சுற்றுப் பயணம்- சுரேஷ் சந்திரா டுவீட்

ajithkumar
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார், இவரது  உலகச் சுற்றுப் பயணம் குறித்து அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா டுவீட் பதிவிட்டுள்ளார்.

நடிகர் அஜித்குமார், ஹெச். வினோத்குமார் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு, இதற்கான புரமோசன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

இந்த நிலையில்; இப்படத்தின் ஷூட்டிங்கின் போது, இடையிடையே தன் உலகச் சுற்றுப் பயணத்தின் முதல் பகுதியாக இந்தியா முழுவதும் அஜித்குமார் பைக்கில்  பயணம் மேற்கொண்டார்.

அவரது பயணம் பைக் ரைடர்களுக்கும்  சாகச விரும்பிகளுக்கும் உற்சாகம் ஊட்டியது. இதனால், ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்து, அஜித்தின் புகைப்படங்களை டிரெண்டிங் ஆக்கினர்..

இந்த நிலையில்,  உலகச் சுற்றுப் பயணத்தின் முதல் பகுதியை இந்தியா முழுவதிலுள்ள அனைத்து மா நிலங்கள், பகுதிகளிலும் பைக்கினால் சுற்றி சாகசப் பயணம் மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் அஜித்தின் மேனேஜர் தன் டுவிட்டர் பக்கத்தில்,  உலகச் சுற்றுப் பயணதின் லெக்-1 ஐ  அஜித்குமார் இந்தியாவில் அனைத்து மா நிலங்களில் பைக் சவாரியை நிறைவு செய்துள்ளார். இந்தியாவில் எப்பகுதிக்குச் சென்றாலும் அவருக்கு கிடைத்த அன்பைக் கருத்தில் கொண்டால் அது ஒரு சாதனை என்று தெரிவித்துள்ளார்.

 
Edited By Sinoj