புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (16:38 IST)

எனக்காக இதை செய்ய முடியுமா? ‘"AK 60" பட கதையில் கரெக்‌ஷன் சொன்ன அஜித்

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் மீண்டும் இணைந்து தனது 60-வது படத்தில் நடித்து வருகிறார். 
 

 
போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தை எச். வினோத் இயக்குகிறார். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் தமிழில் அறிமுகமாக இருக்கிறார். அண்மையில் தான் இப்படத்தின் படப்பிடிப்பை துவங்கினர். அதில் அஜித் போலீஸ் கெட்டடிப்பில் தோற்றமளித்த போட்டோ ஒன்று இணையத்தில் செம்ம வைரலானது. 
 
எனவே போலீசாக அஜித் நடிக்கும் இப்படத்தில் மாஸான பைக் ரேஸ், கார் ரேஸ், ஸ்டண்ட் காட்சிகள் என அஜித்தின் கைவந்த கலைகள் அத்தனையும் இப்படத்தில் இறக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் படத்தின் ஸ்கிரிப்ட்டை படித்துவிட்டு அஜித் இயக்குனருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளாராம். அதாவது, நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம் ஆகிய படங்கள் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதால் இந்த படத்திலும்  ஃபேமிலி சென்டிமென்ட் மற்றும் எமோஷனல் காட்சிகளைச் சேர்க்குமாறு கோரிக்கை வைத்துள்ளாராம். 
 
எனவே தற்போது இயக்குனர் வினோத் அஜித்துக்கு ஏற்றவாறு கதைகளை மாறி அமைத்து வருவதாக கூறப்படுகிறது. ஆக, கூடிய விரைவில் "தல 60" படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெலிஓயாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.