ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 17 ஆகஸ்ட் 2024 (19:37 IST)

கோட் டிரைலரில் அஜித் ரசிகர்களையும் தாஜா பண்ணிய வெங்கட்பிரபு… அந்த வசனத்த கவனீச்சிங்களா?

இந்த ஆண்டில் வெளியாகவுள்ள முன்னணி நடிகர்களின் படங்களில் எதிர்பார்ப்புக்குரிய ஒன்றாக உருவாகி வருகிறது விஜய்யின் GOAT திரைப்படம். இந்த படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக கிராபிக்ஸ் பணிகள் உட்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆனது. ஆகஷன், செண்ட்டிமெண்ட், நகைச்சுவை என வழக்கமான விஜய்யின் மாஸ் மசாலா படமாக கோட் இருக்கும் என்பதை டிரைலர் கோடிட்டு காட்டுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் டி ஏஜிங் லுக் சில வினாடிகளே வந்து செல்கிறது.

இந்நிலையில் டிரைலரில் ஒரு விஷயம் அஜித் ரசிகர்களையும் கொஞ்சம் ரசிக்க வைத்துள்ளது. மங்காத்தா படத்தில் அஜித் பேசும் “சத்தியமா இனிமேக் குடிக்கவே கூடாதுடா” என்ற வசனம் இந்த டிரைலரிலும் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரும் அந்த வசனத்தைப் பேசும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி  வருகின்றன.