வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 23 நவம்பர் 2018 (12:07 IST)

ரசிகனை திட்டிய அஜித் மேனேஜர்! - கொந்தளித்த ரசிகர்கள் - வைரல் வீடியோ

தமிழ் நாட்டில் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் அஜித். இவருக்கு  மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு, இருந்தாலும் அவர் தனக்கு ரசிகர் மன்றம் வேண்டாம் ரசிகர்களின் நலனே போதும் என இருக்கிறார். 
 
சிவா அஜித் கூட்டணியில் அடுத்ததாக வரப்போகும் விஸ்வாசம் படத்திற்காக அவரின் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் படம் தள்ளிக்கொண்டே போவதால் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார்கள்.
 
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ரசிகர் ஒருவர் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவுக்கு போன் செய்து விஸ்வாசம் படத்தின் அப்டேட் கேட்டுள்ளார். அதற்கு அவர் கோபமாகி அந்த ரசிகரை கடுமையான சொற்களால் திட்டியுள்ளார்.
 
இதனை கேட்டு கோபமடைந்த ரசிகர், அஜித்திற்காக தான் உங்களுக்கு மரியாதையை கொடுக்கிறேன். இல்லையென்றால் நடக்கிறதே வேற என்று கூறியுள்ளார்.
 
இதனால் மற்ற ரசிகர் கோபத்தில் அஜித்தின் மேனேஜரை வறுத்தெடுத்து வருகின்றனர்..