புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 21 ஜனவரி 2019 (19:40 IST)

”வாழு வாழ விடு” அஜித் வெளியிட்ட அறிக்கை: ரசிகர்களுக்கு சாஃப்ட் வார்னிங்!

நடிகர் அஜித்குமார் கோடம்பாக்கத்தை ஹாட்டாக்கியுள்ளார். ஆம், நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் தனது ரசிகர்களுக்கு சாஃப்ட் வார்னிங் கொடுத்துள்ளார். 
 
அந்த அறிக்கையில் அவர் ரசிகர்களுக்கு என குறிப்பிட்டுள்ள சில விஷயங்கள் பின்வருமாறு, என்னுடைய தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே. எனவே என் மீதோ என் ரசிகர்கள் மீதோ அரசியல் சாயம் வந்துவிடக்கூடது என்பதில் தெளிவாய் இருக்கிறேன். 
 
நான் ரசிகர்கலை குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு அளியுங்கள் என நிர்பந்தித்தது இல்லை நிர்பந்திக்கவும் மாட்டேன். நான் சினிமாவில் தொழில் முறையாக வந்தவன். அரசியல் செய்யவோ, மற்றவர்களுடன் மோதவோ வரவில்லை. 
அரசியல் சார்ந்த எந்த ஒரு வெளிபாட்டை நான் தெரிவிப்பதில்லை. என ரசிகர்கலும் அதே போல் இருக்க வேண்டும். அதேபோல், சமூக வலைத்தளங்களில் தரமற்ற முறையில் மற்ற நடிகர்கலை, விமர்சகர்களை வசை பாடுவதை நான் என்றுமே ஆதரிப்பதில்லை. 
 
உங்கல் அரசியல் கருத்து உங்களுடையதாகவே இருக்கட்டும். என் பெயரோ, என் புகைப்படமோ எந்த ஒரு அரசியல் நிகழ்விலும் இடம் பெறுவதை நான் விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். 
 
கடைசியாக என் ரசிகர்களாகிய உங்களுக்கு நான் சொல்வது ஒன்று மட்டும் மாணவர்கள் உங்கள் கல்வியில் கவனம் செலுத்துங்கள், உங்கள் தொழிலில் முன்னேற வழிவகை செய்யுங்கள் அதுதான் நீங்கள் எனக்கு செய்யும் அன்பு "வாழு வாழ விடு” என குறிப்பிட்டுள்ளார்.