திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 28 அக்டோபர் 2022 (13:09 IST)

‘துணிவு’ படத்தை வாங்கிய ரெட் ஜெயண்ட்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

thunivu vs varisu
அஜித் நடித்து வரும் ‘துணிவு’  படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தை பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் இது குறித்த புதிய போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆக உள்ளதாக அந்த போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து விஜய்யின் வாரிசு திரைப்படம் வெளியாகும் அதே தினத்தில் தான் அஜித்தின் துணிவு படமும் ரிலீசாக உள்ளது என்பது தெரியவருகிறது 
 
விஜய்யின் ஜில்லா மற்றும் அஜீத்தின் வீரம் ஆகிய இரு படங்கள் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான நிலையில் தற்போது மீண்டும் இருவரது படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran